கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை: பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Engineer Trainee

காலியிடங்கள் 15

மெக்கானிக்கல் - 10

தகவல் தொழில்நுட்பம்- 5

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 24.9.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2024 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இதர பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.9.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT