வேலைவாய்ப்பு

ராணுவத்தில் ஹவில்தார் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள ஹவில்தார்(சர்வேயர் தானியங்கி வரைபடவியலாளர்) பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள ஹவில்தார்(சர்வேயர் தானியங்கி வரைபடவியலாளர்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி்: Havildar (Surveyor Automated Cartographer)

தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் Civil, Electronics, Electrical, Mechanical, Computer Technology, Computer Science பாடப்பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.10.2025 தேதியின்படி 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 166 செ.மீட்டர் உயரமும், 77 செ.மீட்டர் மார்பளவும், 50 கிலோ உடல் எடையும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதிகள்: 6½ நிமிடத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். புல் அப்ஸ், ஜிக் ஜாக் பேலன்ஸ், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவர். எழுத்துத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களிலிருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு தொடர்பான விபரம் Admit Card மூலம் தகுதியானவர் களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின்போது அசல் சான்றுகளைக் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2025.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT