சிஎஸ்ஐஆர் கீழுள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாகவுள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 06/2025
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 36
சம்பளம்: மாதம் ரூ. 70,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, இடபுள்யுஎஸ், இஎஸ்எம் பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி சலுகை அளிக்கப் படும்.
தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் Multimedia and Animation, Physics போன்ற ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் அல்லது Civil,Electrical and Electronics, Metallurgy, Metallurgical போன்ற ஏதாவதொரு பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. .
விண்ணப்பிக்கும் முறை: https://www.nal.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2025
மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.