முகப்பு
வேலைவாய்ப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி' பணியிடங்களான 152 இளநிலை நீதித்துறை உதவியாளர், மீட்டமைப்பவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:17 AM
தில்லி உயர்நீதிமன்றம்
பகிர்:

தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி' பணியிடங்களான 152 இளநிலை நீதித்துறை உதவியாளர், மீட்டமைப்பவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்கள்:

பணி: Junior Judicial Assistant/ Restorer

Advertisement

காலியிடங்கள்: 152

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1994-க்கு முன்பும் 1.1.2008-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறன் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: 23.2.2026 தேதியின்படி, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி மூலம் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,300, இதர பிரிவினருக்கு ரூ.1,500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://delhihighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2026

விண்ணப்பிப்போரின் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Delhi High Court Recruitment for 152 Junior Judicial Assistant Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments