மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சிறப்பு திட்டமான சகி(SAKHI) என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
பணி: சமூகப் பணியாளர் (Case Worker)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: சமூகப் பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள், பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
24 மணிநேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.
பணி: IT Assistant for Mission Sakthi
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட் டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி, ஐடி-இல் அறிவுத்திறனும், 3 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cuddalore.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் -607 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் அல்லது இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.