கோப்புப் படம் 
வேலைவாய்ப்பு

சித்தா மருத்துவர், மருந்தாளுநர், உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள சித்தா மருத்துவர், சித்தா மருந்தாளுர் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணிக்கு ....

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலம் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள சித்தா மருத்துவர், சித்தா மருந்தாளுர் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிச. 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலவாழ்வுச்சங்கம் மூலம் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள சித்தா மருத்துவர், சித்தா மருந்தாளுர் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்கள் https:kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் சித்த மருத்துவருக்கு மாதம் ரூ.60,000, சித்தா மருந்தாளுநருக்கு மாதம் ரூ.20,000, மருத்துவ சிகிச்சை உதவியாளருக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் இந்த மாதம் 25-ஆம் தேதிக்குள் நிா்வாக செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், 42. ரயில்வே பீடா் ரோடு, அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் 631501 அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited for the vacant post of Siddha Doctor-01, Siddha Pharmacist-01 and Yoga and Naturopathy Therapeutic Assistant– 02 in Contract basis the District Health Society, Kancheepuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்: சசி தரூர் பங்கேற்காததற்கு இதுதான் காரணமாம்..!

SCROLL FOR NEXT