இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22 ஆயிரம் குரூப் 'டி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 2026 பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் 'டி' (நிலை 1)
காலியிடங்கள்: 22,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்து (என்சிவிடி, எஸ்சிவிடி) அல்லது என்சிவிடியால் வழங்கப்படும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in, https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.1.2026 முதல் 20.2.2026 இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.