முகப்பு
வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Updated On : 13 பிப்ரவரி, 2025 at 11:48 AM
- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
பகிர்:

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின்(யுபிஎஸ்சி) ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று(பிப். 13) முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் இந்திய பொருளாதாரப் பணி(ஐஇஎஸ்) மற்றும் இந்திய புள்ளியியல் பணி(ஐஎஸ்எஸ்) துறைகளில் காலியாக உள்ள 47 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து இன்றிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 4.

  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30(ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்(மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.