பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive(Quality Assurance)
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Secretary
தகுதி: 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bharatpetrol.eum.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.2.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.