வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Site Assessors

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ. 25,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், எல்க்ட்ரானிக் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் சோலார் பவர் இன்ஸ்லேஷன் துறையில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மார்ச் 9 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும். இது குறித்த விவரம் தகுதியானவர்கள் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.3.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT