இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனமான என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 நிர்வாக பயிற்சியாளர் (நிதி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள சிஏ, சிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 01/26
பணி: Executive Trainee Finance(CA/CMA)
காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 27.1.2029 தேதியின்படி 29-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000
தகுதி: சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.ntpc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.1.2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.