வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 3, 131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 18 வரை அவகாசம்

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள ‘சி’ பிரிவில் 3,131காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம்

Din

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள ‘சி’ பிரிவில் 3,131காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் ‘சி’ பிரிவில் 3,131காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலைத் தோ்வுக்கு வரும் ஜூலை 18-க்குள் https://ssc.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தோ்வுகள் வரும் செப்டம்பா் மாதம் கணினி மூலம் நடை பெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் புதுச்சேரியிலும் இத்தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா!

17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

எரியும் நேபாளம்! ஒரே விமான நிலையமும் மூடல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 96% வாக்குப்பதிவு!

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேநீர் வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

SCROLL FOR NEXT