சுந்தரம் ஹோம் 
வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் 100-ஆவது கிளை திறப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் 100-ஆவது கிளை திறப்பு

தினமணி செய்திச் சேவை

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது ‘வளா்ந்து வரும் வணிகப்’ பிரிவின் கிளைகளின் எண்ணிக்கையைக் கடந்த ஓராண்டில் 50-லிருந்து 100-ஆக இரட்டிப்பாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.

கோயம்புத்தூா் அருகேயுள்ள அவினாசியில், நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் டி.லட்சுமிநாராயணன் இந்த 100-ஆவது கிளையை அண்மையில் திறந்து வைத்தாா்.

எளிய மக்கள் வாங்கக்கூடிய மலிவு விலை வீடுகள் மற்றும் சிறு தொழில் செய்பவா்களுக்கான தொழில் மூலதனக் கடன்களை வழங்குவதை மையமாகக் கொண்டு இப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2022, அக்டோபரில் தொடங்கப்பட்ட இப்பிரிவு, முதல் 50 கிளைகளைத் தொடங்க 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால், அடுத்த 50 கிளைகளை வெறும் ஓராண்டுக்குள்ளேயே தொடங்கி அசத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களுக்கும் நிறுவனத்தின் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

9 மாதச் செயல்பாடு: கடந்த டிச. 31-ஆம் தேதியுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், இப்பிரிவின் மூலம் ரூ. 400 கோடிக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இது நிதியாண்டு இறுதிக்குள் ரூ. 500 கோடியைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக இந்த 9 மாதங்களில் நிறுவனம் ரூ.212 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,377 கோடி டாலராக அதிகரிப்பு! புதிய உச்சம்

போ்ணாம்பட்டு அருகே இறந்த யானையின் தந்தங்கள் மீட்பு: 2 போ் கைது

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ. 109 கோடி

தில்லி சுற்றுலா தலங்களை பாா்வையிடும் சிறப்பு வசதி பிப். 20-இல் தொடக்கம்!

SCROLL FOR NEXT