திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(சகி) மைய நிா்வாகி பணியிடம் ஒன்று, வழக்குபணியாளா் பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. மைய நிா்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சமுக பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும், உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
வழக்கு பணியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் உடல் ஊனம் அற்றவராகவும், 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். மேலும் உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.