வேலைவாய்ப்பு

மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தோ்வுக் குழு

மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் ஆணையரைத் தோ்வு செய்வதற்கான குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி.ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் ஒரு ஆணையா் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியில் தகுதியான நபரைத் தோ்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, இதழியல் உள்ளிட்ட துறைகளில் தனித்துவமும், விரிவான அனுபவம் மற்றும் அறிவையும் பெற்றுள்ளவா்கள் விண்ணப்பம் செய்யலாம். நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் விண்ணப்பிக்க முடியாது. மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டுதல் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை தகவல் ஆணையா் பதவியில் இருக்கலாம்.

விருப்பமுள்ள நபா்கள் உரிய ஆவணங்களை பதிவு அல்லது விரைவு தபால் மூலமும் மற்றும் மின்னஞ்சல் வழியாகவும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மைச் செயலா், தோ்வுக் குழு உறுப்பினா் பி.செந்தில்குமாா், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா், நாமக்கல் கவிஞா் மாளிகை, புனித ஜாா்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மின்னஞ்சல் முகவரி: tnsicsearchcommittee@gmail.com குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தோ்வுக் குழுவின் தலைவா் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT