இந்திய கடலோரக் காவல் படை 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா?: கடலோரக் காவல் படையில் உதவி தளபதி பணி

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய கடலோரக் காவல் படையில் Assistant Commandant பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Assistant Commandant (General Duty-Male) (2027 Batch)

காலியிடங்கள்: 140 (SC-25,ST-24, OBC-35, EWS-10, UR-46)

சம்பளம்: மாதம் ரூ. 56,100

தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Commandant (Technical)

பிரிவு: Mechanical, Electrical, Electronics

காலியிடங்கள்: 30 (SC-3,ST-4, OBC-8, UR-13, EWS-2)

சம்பளம்: மாதம் ரூ. 56,100

தகுதி: Mechanical Engineering Branch: Naval Architecture, Mechanical, Marine, Automobile, Mechatronics, Industrial and Production, Metallurgy, Design, Aeronautical, Aerospace Qunicip ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.

Electrical & Electronics Branch: Electrical, Electronics, Telecommunication, Instrumentation, Instrumentation & Control, ECE, Power Electronics Qunsing ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2026 தேதியின்படி 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் English, Reasoning, Numerical Ability, General Science, Maths, General Knowledge பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு, மருத்துவத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட CCBT, Picture Perception Test, Psychological Test எனப்படும் கடற்படை அதிகாரிப் பணிக்குரிய தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மே மாதம் தொடங்கும் இந்த தேர்வுகள் மும்பை, கோவா, சென்னை, கொல்கத்தா போன்ற இடங்களில் நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு செப்பம்பர் மாதம் தொடங்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக் கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் கேரளம் மாநில எழிமலாவிலுள்ள கடற்படைத்தளத்தில் 44 வாரம் பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிப் பணி வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ரயில் ஏசி வகுப்பு அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும். கடற்படை பயிற்சி டிசம்பர் 2026 இல் தொடங்கும்.

தேர்வு நடைபெறும் தேதிகள்

முதல் கட்டத் தேர்வு: செப்டம்பர் 18, 2025

இரண்டாம் கட்டத் தேர்வு: நவம்பர் 2025

மூன்றாம் கட்டத் தேர்வு: ஜனவரி 2026

நான்காம் கட்டத் தேர்வு: மார்ச் 2026

உடற்தகுதி : குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மேலும் உயரத்திற் கேற்ற எடை மார்பளவு 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் இதரத் தேர்வுகள் தொடர்பான அனைத்து e-Admit Card மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.cdac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை தாக்கும்... சாந்தினி!

நம்ம ஊரு சிங்காரி - சசிகலா

வெள்ளி சலங்கைகள் - வைஷ்ணவி ராவ்

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

SCROLL FOR NEXT