பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் 
வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: HPBP/FTA/01/2025

பணி: Quality Engineer

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 84,000.

தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல், உற்பத்தி, உலோகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Quality Supervisor

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 45,000

தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருப்பதுடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.5.2025 தேதியின்படி 22-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,

விண்ணப்பத்தின் வலது மூலையில் தற்போதைய புகைப்படத்தையொட்டி, அதில் கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr. Manager, HR-IR & Rectt HR Department, 24, Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli 620 014.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டில் அக். 11 வரை மழைக்கு வாய்ப்பு!

அடைமழையால் கடும் வெள்ளம்! அடித்துச்செல்லப்பட்ட கார்கள்!

சேட்டன் ஆன் தி வே... சௌபின் சாஹிர்!

ப்ளாக் அண்ட் பியூட்டி... ரகுல் ப்ரீத் சிங்!

கரூர் விவகாரம்: “விசாரணை குறித்து எதுவும் கூற முடியாது!” -ஐஜி அஸ்ரா கார்க்

SCROLL FOR NEXT