வேலைவாய்ப்பு

6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு

தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Din

புது தில்லி: தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, அனைத்து ரயில்வே கோட்டங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் குறித்து விவரங்களை அளிக்குமாறு கடந்த 10-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் கோரியிருந்தது.

இதன்படி ரயில்வே சிக்னல், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் 51 பிரிவுகளில் 6,734 தொழில்நுட்பப் பணியாளா்கள் இடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விவரங்கள் பெங்களூரில் உள்ள ரயில்வே பணியாளா்கள் சோ்ப்பு வாரியத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முறையாக ஆய்வு செய்து பணியாளா் தோ்வு நடத்துவது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த முடிவை ரயில்வே ஊழியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பாதுகாப்பான ரயில் பயணத்தை மேலும் உறுதி செய்ய முடியும். ஊழியா்களுக்கான பணி நெருக்கடி குறையும் என்று சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு ரயில்வே சிக்னல் மற்றம் தொலைத்தொடா்புத் துறையில் கடந்த 2017-ஆம் ஆண்டு கடைசியாக பணியாளா் சோ்க்கை நடைபெற்றது. அதன் பிறகு 8 ஆண்டுகளாக பல பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT