வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DIN

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 383/TEMP-POSTS/HR/SW/2024-25

பணி: Sr. Software Trainee-I

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் முதுகலை, எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பணி: Jr. Software Trainee-I

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000

தகுதி: கணினி அறிவியல் , ஐடி பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பணி: Software Professionals-I

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 40--க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 60,000

தகுதி: கணினி அறிவியல் , ஐடி, ஏஐ, டேட்டா அறிவியல் மற்றும் டெக்னாலஜி, பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 450 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT