வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-இல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதி அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிவில், எலக்ட்ரிக்கல், டெக்னீசியன் மற்றும் விடுதி உதவி மேலாளர் பணி..

DIN

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக விடுதி அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சிவில், எலக்ட்ரிக்கல், டெக்னீசியன் மற்றும் விடுதி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Consultant Engineer Civil, Electrical

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Male/Female)

காலியிடம் : 3

தகுதி: கணணி அறிவியல்,தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் பிஇ, பி.டெக், பிசிஏ, எம்சிே, எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hostel Assistant Manager (Male)

காலியிடம் : 3

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினியில் எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சன்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 24.6.2025 தேதிக்கு முன் The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli- 620015 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Hostel Office, National Institute of Technology, Hostels - Tiruchirappalli – 620 015.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT