வேலைவாய்ப்பு

விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DIN

இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: AGNIVEER VAYU INTAKE 01/2026

வயதுவரம்பு: இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க 1.1.2005 முதல் 1.7.2008 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கர்னாடிக், ஹிந்துஸ்தானி இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆள்சேர்ப்பின்போது - இசைப் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இசைப் படிப்பில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்று இசைத்துறை பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 162 செ.மீ உயரம், நல்ல தெளிவான பார்வைத்திறன் மற்றும் விமானப்படை வீரர்களுக்குரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

உடல்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களிலும், பெண்கள் 8 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் Push Ups எடுத்தல், Sit Ups மற்றும் Squat போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பணிக் காலங்களில் வழங்கப்படும் சம்பளம் விவரம்:

தேர்வு செய்யப்படுவோருக்கு பணிக் காலங்களில் முதலாம் ஆண்டும் மாதம் ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. ரூ.33,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.36,500, நான்காம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

ஆள்சேர்ப்பு நடைபெறும் இடம்: தில்லி மற்றும் பெங்களூருவில் உள்ள விமானப்படை தளங்களில் நடைபெறும்.

ஆள்சேர்ப்பு நடைபெறும் நாள்: 10.6.2025 - 18.6.2025 .

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் இந்திய விமானப்படையில் இசைக் கலைஞர்களாக பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு விண்ணப்பப் பதிவு 'கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆள்சேர்வு நடைபெறும் நாளில் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT