ஈரோடு மாவட்ட சமூக நலத் துறையின்கீழ் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உளவியல் ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Counsellor
காலியிடம்: 1
சம்பளம்: மதிப்பூதியம் அடிப்படையில் நாள்தோறும் 1,000 வீதம் மாதத்திற்கு 9 நாள்கள் என ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
தகுதி: உளவியல் மற்றும் ஆலோசனை பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்கள் குறித்த முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட பணி சம்மந்தமான அறிவிப்பு www.erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் சென்று பார்த்து படித்து தெரிந்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம் (புதிய கட்டடம்), 6 ஆவது தளம், ஈரோடு - 638 011.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 23.5.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.