கோப்புப்படம்  
வேலைவாய்ப்பு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு பற்றி...

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் (மே 24) முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(மே 24) முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

எனினும் மே 24(சனிக்கிழமை) நள்ளிரவு 11.59 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்ய மே 29 முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT