வேலைவாய்ப்பு

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் குழந்தைகள் சேவை மையத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் ரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 3 மேற்பார்வையாளர், 3 வழக்கு பணியாளர் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு 1 மேற்பார்வையாளர் என 7 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பெண்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேற்பார்வையாளர்(Supervisor)

காலியிடங்கள்: 4(3+1)

சம்பளம்: மாதம் ரூ.21,000

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சமூகப் பணி,கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக சமூகவியல், சமூகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வழக்கு பணியாளர்(Case Worker)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2- ஆவது குறுக்குத் தெரு(மாடி), எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம்(அஞ்சல்), திண்டுக்கல் - 624 004. தொலைபேசி எண்: 04512904070

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து கடைசி நாள்: 24.11.2025.

மேலும், கூடுதல் விவரம் பெற www.dindigul.nic.in ன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Dindigul Railway Station and Palani Bus stand Child Help Desk Recruitment Notification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

SCROLL FOR NEXT