அரசுப் பணிகள்

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தும் இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச. 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

முகாமுக்கு வருவோா் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT