அரசுப் பணிகள்

ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

மதுரை தல்லாகுளம் தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மதுரை தல்லாகுளம் தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். DMS/50/Ch VIII 

பணி: Skilled Artisans

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. M.V.Mechanic (Skilled) - 1
2. M.V.Electrician (Skilled) - 2
3. Painter  (Skilled) - 1
4. Welder (Skilled) - 1
4. Carpenter (Skilled)  - 2

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

கட்டணம் விவரம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை  The Manager, Mail Motor Service,Madurai-625002 என்ற பெயருக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டராக(ஐபிஓ) எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து அதனை விரைவு, பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The Manager, Mail Motor Service,CTO Compound, Tallakulam, Madurai-625002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 17.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19092022_MMS_TN_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT