அரசுத் தேர்வுகள்

ரூ. 80,803 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Court Assistant (Technical Assistant cum Programmer)

காலியிடங்கள்: 11

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.44,900 - 80,803 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எண்சிஏ, எம்.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ போன்ற ஏதாவதொரு கல்வித்தகுதியுடன் ஒரு ஆண்டு கணினித் துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் விண்ணப்பத்தாரரின் தகுதி அடிப்படையில் பணிக்கு நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Registrar(Recruitment), Supreme Court Of India, Tilak Marg,New Delhi, Pin-110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.12.2022

மேலும் விவரங்கள் அறிய www.main.sci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT