ரயில் நிலையத்தில் தங்கம் வாங்கச் சென்றவர்களிடம் இருந்து ரயில்வே போலீஸார் ரூ.63 லட்சம் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். அப்போது சதீஷ் (25) மற்றும் அவரது தந்தை சோமேஸ்வர ராவ் (55) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்ததாக ஆர்பிஎஃப் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த இரண்டு பேரும் நெல்லூருக்கு பிரபல நகைக்கடைக்காக தங்கம் வாங்கச் சென்றதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரிடம் இருந்து ரூ.63 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீஸார், அதனை வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.