3 முறை அறிவிக்கப்படாத காவிரி குடிநீர் நிறுத்தம்: மக்கள் அவதி
குடிநீர் குழாய் பழுது காரணமாக காவிரி குடிநீர் 3 முறை அறிவிக்கப்படமால் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
குடிநீர் குழாய் பழுது காரணமாக காவிரி குடிநீர் 3 முறை அறிவிக்கப்படமால் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாயினர். பெங்களூரு குடிநீர் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் குடிநீர் விநியோக மோட்டார்கள் தற்போது பழுதாகியுள்ளது.
இதனால் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் முறையே அறிவிக்கப்பட்டும், பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி அறிவிக்கப்படாமலும் காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குள் இதுபோன்று 3 முறை குடநீர் நிறுத்தப்பட்ட சம்பவம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர்.
துரைகடனஹல்லி, ஹரோஹல்லி, ததங்குனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்த மோட்டார்களை புதிதாக அமைக்கும் ஒப்பந்தப் புள்ளிக்கு பெங்களூரு மேட்ரொ குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement