தேசியச் செய்திகள்

மதுரையில் 21 வயது இளைஞர் படுகொலையில் 2 பேர் கைது

மதுரையில் 21 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 

ENS

மதுரையில் 21 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். உசிலம்பட்டியைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 31 வயது விதவைப் பெண் உடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுடன் இளைஞர் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த இளைஞர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT