ராணுவ வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக்ததில் பாஜக 22 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்திருந்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது:
எடியூரப்பாவின் இந்த கருத்து அப்பாவி ராணுவ வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. இது பாஜக-வால் நடத்தப்படும் மிக மோசமான அரசியல். ராணுவ வீரர்களின் மனைவிகளை விதவைகளாகவும், குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் ஆக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதுபோன்ற இக்கட்டான சூழலில் கூட பாஜக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. வேறு எந்த தலைவர்களும் இதுபோன்று காரணம் கூறியதில்லை, அதை வாக்குகளாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதில்லை என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.