சென்னையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய குடிபோதை ஆசாமி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,
சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வேதா அருண் என்பவர், வியாழக்கிழமை காலை 7 மணியளவில் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற இரு கார்கள் மீதும் பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அந்த கார்களின் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பிய போது துப்பாக்கியை காட்டி அவர்களை அருண் மிரட்டினார். இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியது, சாலை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிண்டி போக்குவரத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அருணுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.