ஆதார் அட்டை 
என்ன செய்ய வேண்டும்

ஆதார் அட்டை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

ஆதார் அட்டை என்பது, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ எண் கொண்ட அடையாள அட்டை. இது மத்திய அரசால், அனைத்து மாநில மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆதார் அட்டையில், ஒருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ஆதார் அட்டை பெற பயோமெட்ரிக் தகவல்கள் - புகைப்படம், கருவிழி, கைரேகைகள் - பெறப்படும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமகன் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஒருவர் ஆதார் அட்டைப் பெற்றுவிட்டால் ஆயுள்வரை அது செல்லுபடியாகும். இடையே பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இடையே விவரங்களை திருத்தியமைத்தும் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற முன்பதிவு செய்யும் முறை

ஆதார் இணையதளத்துக்குச் செல்லவும்.

அதில் உங்களுக்கு விருப்பமான மொழியைத்தேர்ந்தெடுக்கவும்.

அந்தப் பக்கத்தில் மை ஆதார் என்பதை தேர்வு செய்து அதில் புக் ஆன் அப்பாயின்மென்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

அதில், புக் ஆன் அப்பாயின்மென்ட் அட் உதய் ரன் ஆதார் சேவா கேந்திராவின் கீழ் நீங்கள் இருக்கும் பகுதியை தேர்வு செய்யவும்.

பிறகு, புரசீட் டூ புக் ஆப்பாயின்மென்ட் என்பதில் சென்று உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து ஓடிபி பெற்று அதனை உள்ளிடவும்.

ஆதார் பதிவு மையம் செல்வதற்கான தேதி மற்றும் நேரத்தை தெரிவு செய்து சமர்ப்பிக்கலாம்.

இதன் மூலம் ஆதார் முன்பதிவு கோரிக்கை ஏற்கப்பட்டுவிடும். ஒருவர் முன்பதிவு செய்த நேரத்தில், ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லலாம்.

முன்பதிவு செய்ய

பிறந்த குழந்தைுக்கு ஆதார் விண்ணப்பம்

தேவையான ஆவணங்கள்

1. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் - நகல் மற்றும் அசல்

2. பெற்றோரின் ஆதார் அட்டைகள் - நகல் மற்றும் அசல்

அதாவது, அடையாளச் சான்று, முகவரிச் சான்று, உறவுச் சான்று, குழந்தையின் பிறந்த தேதிச் சான்று ஆகியவற்றை உறுதிபடுத்தும் ஆவணங்கள் தேவைப்படும்.

ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லும்போது இந்த ஆவணங்களின் அனைத்து அசல் மற்றும் நகல்களையும் கொண்டு வர வேண்டும். அசல் சான்றுகள் உறுதி செய்துகொண்ட பிறகு திருப்பி அளிக்கப்படும்.

என்ன செய்ய வேண்டும்?

அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு முன்பதிவு செய்த நேரத்தில் நேரில் செல்ல வேண்டும்.

அவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்.

உரிய ஆவணங்களின் அசலைக் காண்பித்து, நகல்களை இணைக்க வேண்டும்.

பிறகு, குழந்தைக்கு புகைப்படம் எடுத்து இணைத்துவிட்டால், அடுத்த 30 நாள்களுக்குள் ஆதார் அட்டை வீடு தேடி வந்துவிடும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க.

உதய் என்ற ஆதார் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அதில், ஆதார் அட்டை ரெஜிஸ்டிரேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதர விவரங்களையும் சேர்த்த பிறகு, ஃபிக்ஸ் அப்பாயின்ட்மென்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இதில், ஆதார் பதிவு மையத்துக்குச் செல்ல வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம், உரிய தேதியில் நேரடியாக ஆதார் பதிவு மையத்துக்குச் சென்று பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்து விரைவாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

என்னென்ன விவரங்கள்?

ஆதார் விண்ணப்பத்தில், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, தந்தை/தாய்/ பாதுகாவலரின் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டைக் கோரி விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் இல்லை. குழந்தை பிறந்ததும், பிறப்புச் சான்றிதழ் பெற்று ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

புதிய ஆதார் பதிவுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதுபோல, புதிய ஆதார் பதிவுக்கு முழுமையாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இல்லை. குழந்தையாக இருந்தால் புகைப்படமும், பெரியவர்களாக இருந்தால் புகைப்படத்துடன் பயோமெட்ரிக் பதிவுகள் சேகரிக்கப்படும் என்பதால் நேரில் செல்ல வேண்டியது அவசியம்.

ஆதார் சேவைக்கான இணையதளத்திலிருந்து புதிய ஆதார் சேர்க்கை அல்லது தகவல்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்திசெய்து எடுத்துச் செல்லலாம்.

குழந்தைக்கு பதிலாக பெற்றோரில் ஒருவர் தங்களது கையெழுத்தை அளித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

என்ஆர்ஐ குழந்தைகளுக்கு..

குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்டத் தகவல்களை உறுதி செய்வதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும்.

தாய், தந்தையின் ஆதார் விவரம் அளிக்கப்பட வேண்டும்.

என்ஆர்ஐ குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு அடையாள அட்டையாக காண்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் குழந்தையின் பெற்றோர், குறைந்தது 182 நாள்கள் இந்தியாவில் இருந்தால்கூட, அவர்களை என்ஆர்ஐ-ஆகக் கருத முடியாது என்று விதிமுறை தெரிவிக்கிறது.

ஆதாருக்கு விண்ணப்பிப்பதற்காக, கோரப்படும் அசல் ஆவணங்கள், பார்வையிட்டபிறகு, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிடும்.

இந்தியாவில், பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆதாருக்கு விண்ணப்பித்திருக்கிறோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதைக் கொண்டு ஆதார் அட்டை எந்த நிலையில் இருக்கிறது என்பதை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும்.

அஞ்சல் சேவை

தற்போதைக்கு, இந்திய அஞ்சல் துறையின் சேவையில், வீட்டுக்கே வந்து ஆதார் விவரங்களை திரட்டும் சேவை இணைக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் இணையதளத்தில் சர்வீஸ் ரெக்வெஸ்ட் கிளிக் செய்து, அதில் ஐபிபிபீ கஸ்டமர் என்ற வாய்ப்பைத் தேர்வு செய்தால், பல வசதிகள் அதில் இருக்கும். அதில் ஆதார் பதிவு என்பதை தேர்வு செய்து கேட்கப்படும் விவரங்களை அளிக்கலாம்.

இவ்வாறு விண்ணப்பித்தால், அஞ்சலக ஊழியர்கள், வீட்டுக்கு வந்து குழந்தையின் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின், ஆதார் பிவிசி அட்டைகளுக்கு விண்ணப்பித்துப் பெறலாம். https://myaadhaar.uidai.gov.in/genricPVC இந்த இணைய முகவரிக்குச் சென்று ஒருவரின் ஆதார் எண் மற்றும் அங்கிருக்கும் கேப்சா எழுத்துகளை உள்ளீடு செய்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் பற்றி அறிய..

List_of_Supporting_Document_for_Aadhaar_Enrolment_and_Update.pdf
Preview

உங்கள் பகுதிக்கு அருகே உள்ள ஆதார் பதிவு மையத்தை அறிந்துகொள்ள.. https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

SCROLL FOR NEXT