முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 
என்ன செய்ய வேண்டும்

முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வது எவ்வாறு?

தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பிக்கும் முறை..

இணையதளச் செய்திப் பிரிவு

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவ காப்பீடு எடுக்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதே முதல்வர் காப்பீடுத் திட்டம்.

இதன்மூலம், அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கட்டணம் இல்லாமல் உயர் சிகிச்சை பெற முடியும். அதற்கு ஒருவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பித்து காப்பீடு அட்டை பெற்றிருக்க வேண்டும்.

இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில், ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும். மருத்துவக் காப்பீடு பெறக்கூடியவரின் பெயர் குடும்ப அட்டையிலும், மருத்துவக் காப்பீட்டு அட்டையிலும் இருக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் சிறப்பு

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன. இதில் பிறந்த குழந்தைக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்.

அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எட்டு நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறலாம். மேலும் 52 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யபட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதி

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

காப்பீடுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.

ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது

விண்ணப்பிப்பது எப்படி?

1. கிராம நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் அதிகாரிகளிடமிருந்து வருமானச் சான்றிதழைப் பெற வேண்டும்.

2. ஆதார் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடன் வருமானச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை சேகரித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்துக்குச் செல்ல வேண்டும்.

3. அங்கு முதலில் உங்கள் ஆவணங்கள் கியோஸ்க் ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்படும்.

4. குடும்பத்தில் உள்ளவர்களின் கைரேகைகள், புகைப்படம், கண் விழித்திரை ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

5. அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, முதல்வர் காப்பீடு பெற தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை போன்று முதல்வர் காப்பீடு திட்ட மின் அட்டை வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான விண்ணப்பம் ஆன்லைனிலிருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அந்த விண்ணப்பப் படிபம் இதோ..

இந்த விண்ணப்பத்தை படி எடுத்து பூர்த்தி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தேவையான ஆவணங்கள்

1. கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் அதிகாரிகளிடமிருந்து வருமானச் சான்றிதழ்.

2. குடும்ப அட்டை (அசல் மற்றும் நகர் இரண்டும் எடுத்துச் செல்ல வேண்டும்)

3. குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி கடிதம்.

4. அடையாளச் சான்று

5. முகவரிச் சான்று

6. ஆதார் அட்டை

7. பான் கார்டு (தேவைப்பட்டால்)

இந்தத் திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும், 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் - 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விரிவான மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல்களுக்கு, பார்க்க http://www.cmchistn.com/

யாரெல்லாம் இணைய முடியும்?

1. குடும்பத் தலைவர்

2. குடும்பத் தலைவரின் சட்டப்பூர்வ மனைவி / கணவர்

3. குடும்பத் தலைவரின் பிள்ளைகள்

4. குடும்பத் தலைவரின் பெற்றோர்

ஒரு விண்ணப்பத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெயர்கள் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய முடியாது?

1. தமிழகத்தில் வசிக்காதவர்கள்.

2. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள்.

3. குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்படாதவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

பாகிஸ்தானுடன் இருதரப்பு ஆட்டங்கள் இல்லை: மத்திய விளையாட்டு அமைச்சகம்

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT