முகப்பு
வணிகம்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸின் புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளா்களின் வசதிக்காக ‘ஸ்ரீ ஹெல்த் சுரக்‌ஷா 2.0’ என்ற மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 5:22 PM
பகிர்:

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளா்களின் வசதிக்காக ‘ஸ்ரீ ஹெல்த் சுரக்‌ஷா 2.0’ என்ற மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பழைய காப்பீட்டு முறைகளில் இருந்த நடைமுறைச் சிக்கல்களை நீக்கி, மக்களுக்கு முழுமையான நிதி பாதுகாப்பையும் கூடுதல் வசதிகளையும் தரும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்களாக, ஒரு பாலிசி ஆண்டுக்குள் காப்பீட்டுத் தொகையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சிகிச்சை கோராத ஆண்டுகளில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 250 சதவீதம் வரை போனஸ் தொகையாக வழங்கப்படும்.

அவசர காலங்களில் சாதாரண ஆம்புலன்ஸ் மட்டுமின்றி, குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் ஏா் ஆம்புலன்ஸ் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும்.

நவீன மருத்துவ சிகிச்சைகளுடன் ஆயுஷ் பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. சிகிச்சைக்குப் பின் மொத்த தொகையில் ஒரு பகுதியை வாடிக்கையாளா் செலுத்த வேண்டிய கட்டாயம் (கோ-பே) இதில் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறை வாடகைக்கான உச்சவரம்பும் இல்லை.

அத்துடன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர நுகா்பொருள்களுக்கான செலவுகளும் இக்காப்பீட்டில் அடங்குவதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவச் சிகிச்சையை எவ்வித நிதி நெருக்கடியுமின்றி பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →