முகப்பு
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு: தானியங்கி முறையை அமல்படுத்தத் திட்டம்!

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை (க்ளைம்) பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Updated On : 8 ஏப்ரல் 2026, 5:15 am IST
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு - National Port of India
பகிர்:

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை (க்ளைம்) பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவமனைகளில் இருந்து கோரப்படும் காப்பீட்டுத் தொகை தானியங்கி முறையில் பரிசீலித்து உடனடியாக விடுவிக்கும் வசதிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதன் மூலம் காப்பீட்டுத் தொகைக்காக பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை தவிா்க்கப்படும். மேலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கு காப்பீட்டு சேவைகள் ஒரு தடையாக இருக்காது.

Advertisement

Advertisement

தானியங்கி முறையிலான சேவைகளை முன்னெடுக்கும் பொருட்டு, அதற்கான இணையக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளா்களுக்கும், ஆய்வு மாணவா்களுக்கும், அறிவியல் மாணவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் இதற்கான திறனறி போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்களும், ஆய்வாளா்களும் பங்கேற்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது. அதற்கான விண்ணப்ப நடவடிக்கைகள் மற்றும் முன்பதிவு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள என்எம்சி இணையப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.