திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளன்று, இரவு உற்சவர் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம், நாளுக்கு நாள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் ஏழாம் நாளன்று, மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று, தமக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.ஐந்தாம் நாள் - திருமலையில் மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர தாயாரின் உருவத்தைத் தாங்கி மலையப்ப சுவாமி.சர்வபூபால வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி.நான்காம் நாள் - வியாழக்கிழமை - கல்பவிருட்ச வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்பர்.மூன்றாம் நாள் - புதன்கிழமை - சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி.இரண்டாம் நாள் - செவ்வாய்க்கிழமை - சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர்.முதல் நாள் - திங்கள்கிழமை - பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி.