பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தி.நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயிலில் முக்கிய நிகழ்வான வைகுண்டஏகாதசி என்றும் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு தொடங்கியம் ஏராளமான பக்தர்கள் திரண்டு, அரங்கனை தரிசித்து மகிழ்ந்தனர்.பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பகல் பத்து திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று நேற்றுடன் (24ஆம் தேதி) நிறைவு பெற்றது.வைகுண்ட ஏகாதசி’ தினம் தொடங்கி அடுத்து வரும் பத்து நாட்கள் இராப்பத்து என்ற நிகழ்வில் இரவில் எம்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்வார்.பக்தர்கள் இருகரம் கூப்பி உயர்த்தியபடி. கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர்.கரோனா பரவலை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கனை வழிப்பட்டனர்