ஆன்மிகம்

நவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்

DIN
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம்.
முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி ஆகியவை அடுக்க வேண்டும்.
இரண்டாம் படியில் ஈரறிவு உயிரனங்களான நத்தை மற்றும் சங்கு அடுக்கலாம்.
மூன்றாம் படியில் மூவறிவு உயிரனங்களான கரையான் மற்றும் எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் அடுக்கலாம்.
நான்காம் படியில் நான்கறிவு உயிரனங்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் அடுக்கலாம்.
ஐந்தாம் படியில் பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம்.
ஆறாம் படியில் ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாம் படியில் மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாம் படியில் பகவானின் அவதாரங்களை வைக்கலாம்.
ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைக்கலாம். இதோடு பிள்ளையார் பொம்மையையும் வைக்க வேண்டும்.
இப்படி வரிசைப்படி ஒவ்வொரு நிலையாக பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கு கொலு என கூறப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT