இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்த கள்ளழகரை அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் அளவிற்கு கோவிந்தா கோஷமிட்டு அழகரை வரவேற்றனர்.
நூபுரகங்கை தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்த பிறகு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை கள்ளழகர் அணிந்துகொண்டு தங்கக் குதிரையில் வாகனத்தில் வைகை ஆற்றுக்கு வந்த அழகர்.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி போது கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு அழகரை வரவேற்ற பக்தர்கள்.பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தார்.கோவிந்தா, கோவிந்தா என விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்ட பக்தர்கள்.