ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், இளநீர், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.
நவக்கிரகங்களில் முதன்மையானவராகத் திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.உற்சவர் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.தஞ்சாக்கூர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சிக்காக புனித நீர் கலசங்களை வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது.ராகு - கேது பகவானுக்கு அபிஷேகம் - சிறப்பு பூஜைகள்கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியின் போது கலந்து கொண்ட பக்தர்கள்.