இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த, 17ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் ஒளிரும் மகாதீபம் - புகைப்படங்கள்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

DIN
மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீப தரிசன மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் எழுந்தருளினர்.
அதிகாலை 5 மணிக்கு அர்த்த மண்டபத்தில் ஏகன் அநேகன் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட, அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு இரண்டு நிமிடம் காட்சியளித்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.
தங்கக் கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றியதும், 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது.
'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.
திருவண்ணாமலையில் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

SCROLL FOR NEXT