சாமி தரிசனத்துக்காக சாலை வழியாக பிரதமர் வந்தபோது சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
ஆன்மிகம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) சாமி தரிசனம் செய்தார்.

DIN
பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்கும் பண்டிதர்கள்.
11 நாள் விரதம் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது தமிழர் பாரம்பரியம் உடையான வேஷ்டி சட்டையில் ஆடை அணிந்து இருந்தார்.
பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி.
கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்ட பிரதமர் மோடி.
ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிபெற்ற பிறகு யானையின் தும்பிக்கையை தடவி கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT