கோடிக் கணக்கான ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். 
பிற

நடிகர் விவேக் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் - படங்கள்

DIN
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி செலுத்த வரும் நடிகர் யோகி பாபு.
விவேக் மறைவுக்கு நடிகர் சந்தானம், திரிஷா, இயக்குனர் ஷங்கர், காமெடி நடிகர் காளி வெங்கட், விக்ரம், அருண் விஜய், தாமு, சார்லி, ஆர்த்தி, கணேஷ், ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்
அஞ்சலி செலுத்த வரும் வைகோ.
அஞ்சலி செலுத்த வரும் வைகோ.
அஞ்சலி செலுத்த வரும் திமுக தலைவர்கள்.
அஞ்சலி செலுத்திய நடிகர் மயில்சாமி மற்றும் மன்சூர் அலிகான்.
அஞ்சலி செலுத்த வரும் கவியரசு வைரமுத்து.
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி என நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள், அரசியல் பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர் என்று தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'சின்ன கலைவானர்' நடிகர் விவேக்கின் மறைவையொட்டி அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைச்சர் கே.என். நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! விஜய்

தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்..! மிருணாள் தாக்குர் புகழாரம்!

அறிவியல் ஆயிரம்: எகிப்தின் இளம்பாரோன் துட்டகாமன் காலணிகள் - ஒரு திருப்பம்!

பொய் வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும்! - ஆர். எஸ். பாரதி

நீதிக் கதைகள்! உழைக்கிற உடம்பில் நோய் அண்டாது!

SCROLL FOR NEXT