பிற

மிஸ் கூவாகம் 2023 - புகைப்படங்கள்

DIN
மிஸ் கூவாகம் 2023-ஆக தேர்வு செய்யப்பட்டு கிரீடம் சூட்டப்பட்ட சென்னை கே.நிரஞ்சனா (நடுவில்), இரண்டாமிடம் இடம் வென்ற சென்னையை சேர்ந்த ஜி. டிஷா (இடது ஓரம்) மற்றும் மூன்றாமிடம் வென்ற சேலம் இ. சாதனா.
மிஸ் கூவாகம் 2023-ஆக தேர்வு செய்யப்பட்டு கிரீடம் சூட்டப்பட்ட சென்னை கே.நிரஞ்சனா (நடுவில்), இரண்டாமிடம் இடம் வென்ற சென்னையை சேர்ந்த ஜி. டிஷா (இடது ஓரம்) மற்றும் மூன்றாமிடம் வென்ற சேலம் இ. சாதனா.
நடை, உடை, பாவனை மற்றும் கேள்விக்கு அளித்த பதில்களின் அடிப்படையில் தேர்வான திருநங்கைகள்.
மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் முதல், இரண்டாம் சுற்றுகள் உளுந்தூர்பேட்டைல் நடைபெற்றது.
கலைஞர் அறிவாலயத்தில் அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.
முதல், இரண்டாம் சுற்றில் பங்கேற்ற 46 பேரிலிருந்து 16 பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.
அழகிப் போட்டியில் வென்றவர்களை மூத்த திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்தினர்.
முதல், இரண்டாம், மூன்றாமிடம் வென்ற திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கிரீடம் சூட்டி, பட்டம் அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

தெற்கு தில்லியில் மக்களவை வேட்பாளராக களம் இறங்குகிறாா் திருநங்கை ராஜன் சிங்

SCROLL FOR NEXT