பாலிவுட் இயக்குநர் திவ்யாங் தக்கர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் மற்றும் நாயகி ஷாலினி பாண்டே நடிக்கும் படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்'.
ரன்வீர் சிங், ஷாலினி பாண்டே, தீக்ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடும் நாயகன் குறித்து கதை என படக்குழு தெரிவித்துள்ளது.ஆதித்யா ஜோப்ராவின் யாஷ் ராஜ் ஃப்லீம்ஸ் இப் படத்தை தயாரித்துள்ளது.படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படம் விரைவில் வெளியாகவுள்ளது.