இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
பகிர்:
சிறுத்தை, வீரம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிவாவுடன் சூர்யா இணைந்துள்ளார்.இயக்குநர் சிவாவுடன் நடிகர் சூர்யா.சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படத்தை 'யுவி' கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.'சூர்யா 42' படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கியது.இனிதே துவங்கிய 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு.மாலையுடன் நடிகர் சூர்யா.'சூர்யா 42' பான் இந்திய படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டு பாகங்களாக இந்த படம் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.'சூர்யா 42' என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது.சென்னை மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிபு நடைபெறவுள்ளது.நாயகியாக திஷா பதானி நடிக்க, இந்த படத்தில் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.