திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ள படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினர் உடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.சூது கவ்வும் 2 டிரெய்லர் வெளியீட்டு விழா