தில்லியில் பெய்த மழை காரணமாக அசோகா சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது. இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது.சாலையில், திடீரென உருவான பள்ளத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் அருகிலுள்ள சாலையைப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வளையங்களை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர்.திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.தில்லியில் பெய்த கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.