நிகழ்வுகள்

முதல்வர் பழனிசாமியின் தாய் உடல் தகனம்

DIN
சென்னையிலிருந்து சொந்த கிராமம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையிலிருந்து சொந்த கிராமம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
இறுதிச் சடங்கில் முதல்வருடன் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள்.
தவுசாயம்மாளின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
தவுசாயம்மாளின் உடல் சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து ஊர்வமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதிச் சடங்கில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சிலுவம்பாளையம் இடுகாட்டில் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT